திறன் விருதுகள் வழங்கும் மார்கழி கோலப்போட்டி வீதி விழா.
தஞ்சாவூர் மாவட்டம் திறன் விருதுகள் வழங்கும் மார்கழி வீதி திருவிழா கோலப்போட்டியில் விழாவையொட்டி, பாரத் கலை அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத் கல்லூரி நிறுவனர் திருமதி புனிதா கணேசன் போட்டியை துவக்கி வைத்து வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக டெம்பிள் சிட்டி முத்துக்குமார் கேளக்ஸி அசோசியேசன் நிறுவனர் மணிகண்டன் பிரபு தஞ்சை விக்ட்ரி லயன்ஸ் தலைவர் திருநாவுக்கரசு ,எஸ் டி வி பள்ளி இயக்குனர் டேவிஸ் வைத்தியநாதன் ,அன்பு சேனல் ஆனந்த் ,ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்.
தொடர்ந்து கோல்ப் போட்டியில் நடுவர்களாக மான்சா அகடாமி தனலட்சுமி ஸ்ரீதர் , அனைத்திந்திய சட்ட உரிமை கழகம் , மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, அகரம் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி ,வேலம்மாள் போத்தி வளாகம் இ சிஆர் தலைமை இந்திரா மாணிக்கம் ,ஓவிய ஆசிரியர் அனுராதா,முனைவர் மக்கள் பாடகன் மதுரை சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியை அனணத்து ஏற்பாடுகளை செய்த திறன் விருதுகள் வனம் தமிழ் குடில் நிறுவனத் தலைவர் ச.மாதவன் வனம் தமிழ் குடில் பொதுச்செயலாளர் வெள்ளைச்சாமி பாக்யராஜ், வனம் தமிழ் குடில் செயலாளர் இயற்கை ரவி , வனம் தமிழ் குடில் பொருளாளர் சிவசுப்பிரமணியன் , திறன் விருதுகள் வனம் தமிழ் குடில் பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இந்த கோலப்போட்டியில் பெண்கள் உற்சாகமாக கலகலந்து கொண்டனர் இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்குபெற்று பல வண்ணத்தில் கோலமிட்டனர். புள்ளி கோலங்கள், கம்பி கோலங்கள், ரங்கோலி ஆகிய பல வகைக் கோலங்கள் இடம்பெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற ,பெணகள், மாணவிகள் ,சிறுமிகள் ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment