தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்.
ஆசிரியர் குரல்(தமிழ் வார இதழ்), அகில இந்திய தனியார் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு இணைந்து நடத்திய தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.
இந்த வேலைவாய்ப்பு முகாமை
லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பளி முதல்வர் சுவாமிநாதன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் நடனசிகாமணி வரவேற்புரை வழங்கினார்.
அகில இந்திய தனியார் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிர்வாக அறங்காவலர் டாக்டர் இ. லாரன்ஸ் தலைமை தாங்கி உரையாற்றினார், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்து சுமார் 25-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் கலந்து கொண்டன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணினி, அறிவியல், வணிகவியல், கணிதம் மற்றும் சிறப்பு பாடப்பிரிவுகளான யோகா, ஹிந்தி, விளையாட்டு துறை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளுக்கான நேர்காணல் நடைபெற்றது.இந்த தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை லிட்டில் ஸ்காலர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பளி முதல்வர் சுவாமிநாதன் மற்றும் தாளாளர் நடனசிகாமணி, அகில இந்திய தனியார் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் நிர்வாக அறங்காவலர் டாக்டர் இ .லாரன்ஸ்
செய்திருந்தனர்.
வேலைவாய்ப்பு முகாமில் 150 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதி செய்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாம் படிக்கும்போது எங்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைந்தது என்று இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment