பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 6 February 2023

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்

பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார். 



தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அடைக்கலம் காத்த அய்யனார் குரூப்ஸ் மற்றும் வள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.


பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு மாடு பந்தயம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பெரிய குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது.தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றது.போட்டியில் முதல் இடம், இரண்டாம் இடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கும் நான்காவது இடத்தில் வந்த வண்டிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியை பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பந்தயங்களை கண்டுகளித்தனர்.



செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad