அகில இந்திய பாரா வாலிபால் போட்டி: ஆண்கள் பிரிவில் கர்நாடகா முதலிடம், : பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் முதலிடம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 5 February 2023

அகில இந்திய பாரா வாலிபால் போட்டி: ஆண்கள் பிரிவில் கர்நாடகா முதலிடம், : பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் முதலிடம்

அகில இந்திய பாரா வாலிபால் போட்டி: ஆண்கள் பிரிவில் கர்நாடகா முதலிடம், : பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் முதலிடம்



இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலிபால் சங்கம், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் 11வது அகில இந்திய சிட்டிங் பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலை.  மைதானத்தில் பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கியது.

  
இப்போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, உத்தரகண்ட், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான், ஒடிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட 22 மாநிலங்களில் இருந்து 36 அணிகளைச் சேர்ந்த 450 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.

 

இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.  ஆண்கள் பிரிவில் கன்னட அணி முதலிடத்தையும், தமிழக அணி 2வது இடத்தையும், அரியானா, ராஜஸ்தான் அணிகள் 3வது இடத்தையும் பிடித்தன.

 
பெண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணி முதலிடத்தையும், கன்னட அணி 2-வது இடத்தையும், தமிழ்நாடு, ஹரியானா அணிகள் 3-வது இடத்தையும் பிடித்தன.
  4 அணிகளில் இருந்தும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பாரா ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.



வெற்றி பெற்ற அணிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கோப்பைகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவார் வழங்கினார்.  நிகழ்ச்சியில் மேயர் சண்.  ராமநாதன், ஆணையர் க.சரவணகுமார், தமிழ்நாடு பாரா வளி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ஜி.ராஜன், தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கத் தலைவர் து. கிருஷ்ணசாமி வாண்டையார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad