பந்தநல்லூர் அனைத்து வணிகர் நல சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அனைத்து வணிகர் நல சங்கம் மற்றும் மாவட்ட கண் பார்வை இழந்த தடுப்புச் சங்கம் கோணலபள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் வணிக நல சங்கத்தின் தலைவர் ரகுராமன் தலைமையில் நடைபெற்றதுஇந்த கஞ்சி முகாமிற்கு செயலாளர் குமார் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
இந்த கண் சிகிச்சை முகாமில்வட்டார மருத்துவ அலுவலர்டாக்டர் அபினேஷ் அரசு கண் மருத்துவர் டாக்டர் சாம்சங் ஆகியோர் கொண்ட மருத்துவ குழு இலவச மருத்துவ முகாமுக்கு வந்திருந்த பல்வேறு பொதுமக்களை கண் பரிசோதனை செய்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். இந்த மருத்துவ முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் 72 நபர்களுக்கு தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில்சங்கத்தின் துணைத் தலைவர்கள் செந்தில் அன்சாரி சிவானி ரவி துணை செயலாளர்கள் பாரதி சரவணன் முத்து கிருஷ்ணன் இணை செயலாளர்கள் வடிவழகன் ஞானபிரகாசம் அப்துல்லா அலிபாத் ஆலோசனை குழுவினர்கள் ரவிக்குமார் .முத்து. முகுமது ஜமில்.ரவி. அசோகன்.மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment