தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா அணைக்கரையில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளி.நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 30. லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா அணைக்கரை ஊராட்சி துணைத் தலைவர் ஜி ஆர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு திருப்பனந்தாள் ஒன்றிய பெருந்தலைவர் தேவி ரவிச்சந்திரன் திருப்பனந்தாள் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்.பள்ளி தலைமை ஆசிரியர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அணைக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளி கட்டணம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ராமலிங்கம் மாநிலங்களவை உறுப்பினர் எஸ் கல்யாணசுந்தரம் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன்.ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் ஒன்றிய துணைத் தலைவர் கோ க அண்ணாதுரை.ஒன்றிய செயலாளர்கள். மிசா மனோகரன் உதய ரவிச்சந்திரன்.மற்றும் வேல்முருகன் தினேஷ் ராமகிருஷ்ணன் ராஜேஷ் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment