பிஎம்டி அறங்காவலர் கே.என்.இசக்கிராஜா தேவர் மீதான வழக்கை ரத்துச்செய்யக்கோரி மாநில செயல் தலைவர் கே.சசிகுமார் பேட்டி
சிவசேனா மாநில செயல் தலைவர் கே.சசிகுமார் தஞ்சாவூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். கோவையில் சிவசேனா கட்சி சார்பில் பிப்ரவரி 14ம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பாளராக கலந்து கொண்ட பிஎம்டி அறக்கட்டளை தலைவர் கே.என்.இசக்கிராஜ தேவர். அழைக்கப்பட்டவர்.
நிகழ்வில் பேசும் போது எந்தவொரு தனிநபரைப் பற்றியும் பேசவில்லை அல்லது தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை. இந்நிலையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.எனவே, பிஎம்டி அறங்காவலர் கே.என்.இசக்கிராஜா தேவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கு விடுவிப்பதை குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபுவிடம், மாநில செயல் தலைவர் சசிகுமார் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment