பேராவூரணி ஆதனூரில் பாதுகாவலர் புனிதர் சந்தியாகப்பர் ஆண்டு பெருந்திருவிழா.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் கிராமத்தில் வேண்டுபவர்களுக்கெல்லாம் வேண்டும் வரம் தந்து கொண்டிருக்கிற பாதுகாவலர் புனிதர் சந்தியாகப்பர் ஆலய ஆண்டு பெருந்திருவிழா திருப்பலியுடன் நடைபெற்றது. சந்தியாகப்பர் என்பவர் நற்செய்தியாளர் யோவானின் உடன் பிறந்த சகோதரர். அவர் கடற்கரையில் தன் தந்தையோடு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஏசுவால் அழைக்கப்பட்ட முதல் சீடர்களில் இவரும் ஒருவர் ஆவார். 12 சீடர்களில் முதல் முதலாக தலை துண்டிக்கப்பட்டு மறைச்சாட்சியாக மரித்தவரும் இவரே. இவர் ஸ்பெயின் நாட்டின் பாதுகாவலர் என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் வெள்ளை நிற குதிரையில் ஒரு கையில் தங்க நிற சிலுவையில் வெள்ளை நிற கொடியுடனும், மற்றொரு கையில் வாள் ஏந்தியும் மக்களை காத்து வருபவர் போன்ற படம் வைத்து பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.
ஆதனூர் விவசாயிகள் தங்களின் காவல் தெய்வமாக புனித சந்தியாகப்பரை வணங்கி வருகின்றனர். ஆண்டுகள் தோறும் நெல் அறுவடை நேரத்திலும், நோம்பு நாட்கள் ஆரம்பத்திற்கு முன்பும் இந்த ஆலயத்தின் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பெருவிழா திருப்பலியை ஆதனூர் பங்குதந்தை அருட்திரு , ஆரோக்கிய சாமிதுரை அடிகளார் நிறைவேற்றினார். திருப்பலியில் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாகிகள் எஸ்.மரியசவரிநாதன், இ.பாலன், முன்னாள் உதவி ஆய்வாளர் இருதயராஜ், அருட்செல்வம், அந்தோணிராஜன், அன்பானந்தம்,
ஐசக் நியூட்டன், பிரான்சீஸ், ஜான்போஸ்கோ ,செல்வஸ்டார் , கிராம தலைவர் மான்சிங் உள்ளிட்ட நிர்வாகிகள், பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் த.நீலகண்டன் .

No comments:
Post a Comment