தஞ்சையில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம்
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கான பயிலரங்கம் தஞ்சாவூரில் உள்ள ரோட்டரி ஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.வேளாண்மை அலுவலர் பு.கனிமொழி வரவேற்று பேசினார் .
நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். வேளாண்மை துணை இயக்குனர் வேளாண் வணிகம் கோ.வித்யா விவசாயிகள் உற்பத்தி செய்ததுடன் நிறுத்தி விடாமல் தங்களுடைய விளைபொருளை மதிப்பு கூட்டி விற்பனை செய்து தொழில் முனைவோர்களாக மாற வேண்டும் என்று எடுத்து கூறி திட்ட விளக்க உரை ஆற்றினார். வங்கிகளில் புதிய தொழில் முனைவோருக்கான கடன் உதவி பற்றி முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன் எடுத்துரைத்தார்.
வேளாண் விளைப் பொருட்களை மதிப்பு கூட்டுதல் திருமதி ஹேமா NIFTEM எடுத்துரைத்தார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திருமதி வி சகுந்தலா தொழில் முனைவோருக்கான வாய்ப்புகள் பற்றி எடுத்துக் கூறினார்.தொழில் முனைவோருக்கான வர்த்தக வாய்ப்புகள் பற்றி வர்த்தக ஆலோசகர் சங்கர்,KPMG எடுத்துக் கூறினார்.தொழில் முனைவோர் சந்திக்கும் சவால்கள் பற்றி தொழில் முனைவர் திருமதி கோகிலா ராஜேஷ் கண்ணன் எடுத்து கூறினார். நிகழ்ச்சியில் வேளாண் தொழில் முனைவோர்கள், வேளாண் விற்பனைத்துறை வேளாண்மை அலுவலர்கள் ஜெய் ஜிபால், திருமதி. தாரா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் நிறைவில் வேளாண்மை அலுவலர் பிரதீப் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment