தஞ்சை மாவட்டம், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் திருக்கோயில்களின் சார்பில் கூலித் தொழிலாளர்களான ஊமத்தநாடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கருக்கும் துறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிருந்தாவுக்கும் இன்று நீலகண்டப் பிள்ளையார் கோவிலில்திருமணம் செய்து வைக்கப்பட்டது.
விழாவிற்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை வகித்தார்.கோயில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். கோயில் சார்பில் மணமக்களுக்கு தங்கத் தாலி முகூர்த்த புடவை வேட்டி சட்டை மற்றும் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. விழாவில் திமுக ஒன்றிய செயலாளர் அன்பழகன், முடப்புளிக்காடு கிராமத்தினர், சங்கரன் வகையறாக்கள் கோயில் பணியாளர்கள் மற்றும் மனமக்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment