சுவாமிமலையை நகராட்சியாக தரம் உயர்த்த கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்
சுவாமிமலை பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை பேரூராட்சி மன்ற சாதாரணக் கவுன்சில் கூட்டம் நேற்று சுவாமிமலை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி தலைவர் எஸ்.வைஜெயந்தி தலைமையில் நடந்தது.
இதில், தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை பேரூராட்சியில் உள்ள நாகக்குடி மற்றும் திருவலஞ்சுழி
ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும், என தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் என்பவரால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான, இணை இயக்குநர் (பொது) பேரூராட்சிகளின் ஆணையரகம் மூலம், தஞ்சாவூர்
மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநருக்கு கடிதம் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக நேற்று சுவாமிமலை பேரூராட்சியில் உள்ள நாகக்குடி மற்றும் திருவலஞ்சுழி
ஊராட்சிகளை இணைத்து நகராட்சியாக தரம் உயர்த்திடவதற்காக கடந்த ஜன.25 ம் தேதி அதற்கான கடித்தை பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சுவாமிமலை பேரூராட்சியை சுற்றியுள்ள நாககுடி,திருவலஞ்சுழி,பாபுராஜபுரம்,வளையப்பேட்டை,மாங்குடி ஆகிய பஞ்சாயத்தைகளை இணைந்து, நகராட்சியாக தரம் உயர்த்திட மொத்தமுள்ள 13 கவுன்சிலர்களில், 9 கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment