மாவட்ட அளவிலான கைப்பந்து, கபடி , போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்களை துணைவேந்தர் பாராட்டு
தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டிகளில், தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் கைப்பந்து போட்டியில் இரண்டாம் இடமும், கபடி போட்டியில் மூன்றாம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை துணைவேந்தர் சந்தித்துப் பாராட்டினார். இந்நிகழ்வில் பதிவாளர்(பொ) , உடற்கல்வி ஆசிரியர் .சி.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment