கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்றார். தோட்டக்கலை அலுவலர் க.ஹேமா சங்கரி கூறுகையில், நடப்பாண்டில் செயல்பட்டு வரும் தேசிய தோட்டக்கலை இயக்கம் காய்கறி விதைகள், பழக்கன்றுகள், வாழைக்கன்றுகள், மிளகு, கொக்கோ செடிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வாழையில் ஊடுபயிர் காய்கறிகள், தென்னையில் ஊடுபயிராக வாழை பயிரிடலாம் என்றார்.
தெளிப்பான்கள், அலுமினிய ஏணி, பிளாஸ்டிக் கூடைகள் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார். சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மற்றும் 75% மானியத்தில் வழங்கப்படுகிறது என்பதை எடுத்துக் கூறினார். வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை கீழ் உதவி வேளாண் அலுவலர் மதியழகன் கூறுகையில் சென்னையில் ஆதார விலை திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் பற்றி எடுத்துக் கூறினார்.
இதில் வட்டார பண்ணை தகவல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.நிறைவாக உதவி தொழில் நுட்ப மேலாளர் கு. நெடுஞ்செழியன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் த. சத்யா செய்திருந்தார்.
செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:
Post a Comment