தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏரகரம் ஊராட்சி, மேலக்காவேரியில் ஜாமியா நகர் பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் மக்களின் பல்வேறு அடிப்படை பிரச்சனைகளான சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் மிக மோசமாக உள்ளது. ஜாமியா நகர் பகுதியில் பல்வேறு சாலைகள் மோசமாக உள்ள நிலையில், ஜாமியா நகர் முதல் குறுக்கு தெரு மிகவும் குண்டு குழியுமாக, லேசாக மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்கி நின்று ,பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலையில் இந்த சாலை உள்ளது. இந்த சாலையை சரி செய்யக்கோரி ஏரகரம் ஊராட்சி மன்றம், கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகம் என, இந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில் தற்போது பகுதி பொது மக்கள்
சம்பந்தப்பட்ட ஜாமியா நகர் சாலையை சரி செய்ய கோரி ,வருகிற வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் ,தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கிற வகையில், போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment