பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் உலக தாய்மொழி தினவிழா : பேச்சு கட்டுரை போட்டி.
தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில், உலக தாய்மொழி தினம் சனிக்கிழமை நடைபெற்றது .
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை நறுவீ தமிழ்ச்சங்கம் முன்னெடுக்கும், தஞ்சை மாவட்ட பள்ளி மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வினைக் கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி அவர்கள் தலைமையேற்று, கல்லூரியின் முதல்வர் முனைவர் செ.காயத்ரி முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பேச்சு போட்டியில் புனித வளனார் மேல்நிலைப் பளளி மாணவி சா ஷாபனா முதல் பரிசாக 3000 -ம், விட்டில் ஸ்காலர் மேல்நிலைப்பள்ளி மாணவி ரா.ஸ்ரீவின்ஸ்காஜா இரண்டாம் பரிசாக 2000-ம்,புனித வளனார் மேல்நிலைப் பள்ளி மாணவி க.சத்யா ,அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பா.அனுசுயாதேவி ஆகியோர் மூன்றாம் பரிசாக1000-ம்
பெற்றுக்கொண்டனர்.தொடர்ந்து 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு கவிதை போட்டியில் செயிண்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி மாணவி. சூ.ரீனா முதல் பரிசாக 3000 -ம்,மாரியம்மன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி பா.மதுமிதா இரண்டாம் பரிசாக 2000-ம்,சாலியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கு.சந்தானலட்சுமிமூன்றாம் பரிசாக1000-ம் பெற்றுக் கொண்டனர்.
பள்ளி மாணவிகள் தங்களது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி பணப்பரிசினைப் பெற்றனர்.அதிக அளவில் அரசு பள்ளி மாணவிகள் பங்கெடுத்தமையைப் பாராட்டி கல்லூரியின் இயக்குநர் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியினைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.சத்தியா பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவிகள் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்

No comments:
Post a Comment