கும்பகோணம் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 21 February 2023

கும்பகோணம் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

கும்பகோணம் கலைக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா. 



உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா கல்லூரி முதல்வர் முனைவர் தனராஜன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் துறை தலைவர் இணை பேராசிரியர் காளிமுத்து வரவேற்றார். வேதியியல் துறை தலைவர் மீனாட்சி சுந்தரம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியரும் ஆட்சி குழு உறுப்பினருமான அரங்க. பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 தனது சிறப்புரையில் “உலகத்தாய் மொழி நாள் உருவான வரலாற்றினை விரிவாக எடுத்துரைத்த்தோடு, தாய்மொழி தமிழுக்காக உயிர்நீத்த தியாகிகளை நினைவு கூர்ந்தார். உலகத் தாய்மொழி நாள் என்பது வங்காளதேசத்தின் மாணவர் போராட்டத்தை வைத்து ஐக்கிய நாடுகள் சபை தந்துள்ளது. அதனை வரவேற்கிறேன். 


அதே சமயம் தாய் மொழிக்காக 1938 முதல் 1965 வரையில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் தம்மை மாய்த்துக்கொண்ட வரலாறு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் நிகழ்ந்தது. எனவே தியாகி நடராஜன் உயிர் மாய்த்துக்கொண்ட நாளைத்தான் தாய்மொழி நாளாக கொண்டாட அறிவித்திருக்க வேண்டும் என்றார்.  மேலும் அறிஞர் அண்ணா, அம்பேத்கர் போன்றோரின் சமூக நீதியும் சமத்துவச் சிந்தனைகளும்தான் மனிதனை மனிதனாக வாழ வழிகாட்டுவன. அவர்களின் சிந்தனை மரபில் மாணவர்கள் எதிர்காலத்தில் பயனிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 


மேலும் மொழிகளில் உயர்வு தாழ்வு கிடையாது என்றும், தேவைக்கேற்ப பல மொழிகளைக் கற்றாலும் நம் அடையாளத்திற்காகத் தமிழ் மொழியை என்றும் மறவாது இருக்கவேண்டும் எனக்கூறினார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் சபாபதி மோகன் சிறப்புரையாற்றினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad