தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 100 நாள் வேலை கேட்டு மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் மேனகா ஆர்ப்பாட்டம் குறித்து உரையாற்றினார்.அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 2023- 2024 ஆம் நிதி ஆண்டில் அரசாணை 52 இன் படி தொடர்ச்சியாக 100 நாட்கள் வேலை, 4 மணி நேர வேலை அரசு நிர்ணயிக்கும் முழு கூலியை உத்திரவாதப்படுத்த வேண்டும். சிறப்பு கிராம சபை கூட்டங்களை நடத்தி வேலை திட்டத்தை தீர்மானமாக நிறைவேற்றிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் 30 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment