தஞ்சாவூர் அருகே பயன்பாட்டில் இருந்த பழைய குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது :மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா? - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 27 February 2023

தஞ்சாவூர் அருகே பயன்பாட்டில் இருந்த பழைய குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது :மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

தஞ்சாவூர் அருகே பயன்பாட்டில் இருந்த பழைய குடிநீர் தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது :மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?


தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கரைமீண்டார் கோட்டை ஊராட்சி கிராமத்தில் கோட்டை ஆண்டார் பகுதியில்  250-க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோயில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. 

அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.ஜி.எஸ் விக்னேஷ் கூறும்போது கோட்டை ஆண்டார் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கீழ்பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக நான்கு தூண்கள் விரிசல் பிளவுகள் அதிகமாக உள்ளது. 
 

எப்பொழுது இடிந்து விழுமோ? என்ற அபாய நிலையில் உள்ளது. இந்தப் பழுதடைந்த நீர்தேக்கத் தொட்டியில் அதிகளவில் இரும்புத் துகள்கள் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து காணப்படுகிறது. இந்த நீரைப் பருகுவதால் வெள்ளக்குட்டை கிராம மக்கள் நோய்தொற்று ஏற்படக்கூடும் அபாய நிலை உள்ளது.  

அதனால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நிதி ஒதுக்கீடு செய்து புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஐந்து வருடங்கள் ஆகி உள்ளது.தனியார இடத்தில் ஒரு கால் தூண் இருப்பதால  திறக்க முடியாமல் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே இது சம்பந்தமாக கரைமீண்டார் கோட்டை  ஊராட்சி மன்றத்தலைவர் சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக மனு அளித்தும் நேரில் சென்று பேசியும் முயற்சித்தோம் . எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அதிகாரிகள் சம்மந்தப்பட்ட மேல் நிலைநீர் தேத்கத்தொட்டியை நேரில் ஆய்வுசெய்து  புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டியை  விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்  என்றார்


பொதுமக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டியை திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad