தஞ்சாவூரில் நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு கோட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பி. சரவணன் தலைமையில் நடந்தது. மாநிலத் துணைத் தலைவர் .எஸ். மகேந்திரன் துவக்கி வைத்தார்.
மாவட்ட துணை தலைவர்கள் பி .சைவராஜன் , மாலை.இளங்கோவன் பி. சந்திரசேகரன், மாவட்டத் துணைத் செயலாளர்கள் கே. வீரையன் எஸ்.திரவியராஜ் ,ஜி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் டி.ஜெனார்த்தன் -கோரிக்கைகளை விளக்கி கூறி வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும்,
சாலைப்பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூபாய் 5,200/-, ரூ.20,200/- தர ஊதியம் ரூபாய் 1900 வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர் நீத்தவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும்.
நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்கும் ஒப்பந்த நடைமுறையை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும் சாலையினை புதுப்பிக்கும் ஒப்பந்ததாரோ 5 ஆண்டு பராமரிக்க அனுமதிக்கும் நடைமுறையை கைவிட்டு அரசே சாலை பராமரிப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும்.
சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி மற்றும் சீருடை சலவை படி வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மாா்ச் 10- ஆம் தேதி திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் வி தம்பி அய்யா வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் எஸ் மகேந்திரன் ,மாநில பொது செயலாளர் ஏ அம்ஜராஜ், மாவட்ட பொருளாளர் கருணாநிதி ஆகியோர் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் செய்தியாளர்
இரா. ஏசுராஜ்
No comments:
Post a Comment