பேராவூரணி அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 26 February 2023

பேராவூரணி அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா.

.com/img/a/

IMG-20230226-WA0050
பேராவூரணி அரசு கல்லூரியில் இலக்கிய மன்ற விழா


தஞ்சை மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில துறை இலக்கிய மன்ற விழா நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்(பொ) ராணி தலைமை வகித்தார். ஆங்கில துறை தலைவர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினர் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரி ஆங்கில துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜேஷ் பேசியதாவது, 


மொழிபெயர்ப்பின் தேவை, அவசியம், இயந்திர மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்புக்கு துணை செய்யும் ஆன்லைன் கருவிகள், மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள், மொழிபெயர்ப்பு துறையில் உள்ள வேலை வாய்ப்புகள், மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபடும் நிறுவனங்கள், பல்வேறு வகையான மொழிபெயர்ப்புகள், மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய முறைகள் பற்றி கல்லூரி மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.முன்னதாக ஆங்கில துறை பேராசிரியர் சதீஷ்குமார் வரவேற்றார்.நிறைவாக பேராசிரியர் முனைவர் பெரியசாமி நன்றி கூறினார்.

செய்தி: த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad