தஞ்சாவூர் இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு இன்னர் வீல் சங்கமும் VKC Pride நிறுவனமும் இணைந்து பிப்ரவரி18 -ம் தேதியில் சனிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் தஞ்சை பெரிய கோவிலிருந்து அனைத்து மகளிருக்கான "புடவையில் ஓர் நடைப் பயணம்", பாரம்பரிய உடைகளுக்கான கௌரவத்தை மீட்டெடுக்கும் ஓர் உன்னத முயற்சியாக நடத்த இருக்கிறது.
இந்நிகழ்வைத் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் தொடங்கிவைக்க இருக்கிறார். தஞ்சாவூர் முனிசிபல் கார்பரேசன் ஆணையர் சரவண குமார் மற்றும் தஞ்சாவூர் மேயர் சண். இராமநாதன் ஆகியோர் இந்நிகழ்வை சிறப்பிக்க இருக்கின்றனர். இன்னர் வீல் சங்கத்தின் பொன்விழா ஆண்டின் குழுத்தலைவர் PDC Dr. உஷா நந்தினி, தலைவர் Dr.சோபியா மற்றும் இன்னர் வீல் சங்கத்தின் உறுப்பினர்கள் இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
இப்போட்டி வயது வரம்பின் அடிப்படையில் மூன்று பிரிவின்கீழ் நடைபெறும். 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு 4 கி.மீ நடைபயணமும், 36 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு 3 கி.மீ நடைபயணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பிரிவினருக்குமான பரிசுகளாக முதல்பரிசு ரூ 7500, இரண்டாம் பரிசு ரூ 5000, மற்றும் மூன்றாம் பரிசு ரூ 2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 60 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1 கி.மீ தூரமும், முதல் பரிசாக ரூ 5000, இரண்டாம் பரிசாக ரூ 3000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ 2000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆதார் அட்டையுடன் பதிவுக் கட்டணம் ரூ 100 ஐ 15.02.2023ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டும்.
போட்டியன்று பதிவு பதிவு செய்பவர்களுக்கு பதிவுக்கட்டணம் ரூ 200. கல்லூரி மாணவிகளுக்கு பதிவுக்கட்டணம் இல்லை. கல்லூரி அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். பங்கேற்பாளர்கள் புடவை அணிந்து வர வேண்டும்.
பதிவுத் தொடர்புக்கு நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.சண்முகவடிவு (9730669869) மற்றும் PP. புவனா (9894866277) ஆகியோர் எண்களில் ஒன்றைத் தொடர்பு கொள்ளவும். இந்நிகழ்வில் அனைத்து மகளிரும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.என ஒருங்கிணைப்பாளர்
உஷா நந்தினி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஏற்பாட்டினை நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் உஷா நந்தினி, தலைவர் சோபியா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முக வடிவு , புவனா மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
தஞ்சை செய்தியாளர்
இரா. ஏசுராஜ்

No comments:
Post a Comment