பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் பேட்டி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 12 February 2023

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் பேட்டி

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் - பழ.நெடுமாறன் பேட்டி


தஞ்சாவூர்: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், தமிழீழம் குறித்த விரிவான அறிக்கையை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும் உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.  தஞ்சாவூரில் இன்று (பிப்.13) செய்தியாளர்களைச் சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவர் மனைவி, மகளுடன் இருக்கிறார். அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். அவர்களுடன்தான் இந்தத் தகவலைத் தெரிவிக்கிறேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு பிரபாகரனைப் பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன, இலங்கையில் அதற்கான சூழல் உருவாகியுள்ளது.  இலங்கையில் ராஜபக்சே குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.  எனவே இந்த தகவலை வெளியிடுகிறேன்.  

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற செய்தி எலமைட்களுக்கு நம்பிக்கையைத் தரும்.  விரைவில் பிரபாகரன் தமிழீழம் தொடர்பான விரிவான அறிக்கையை வெளியிடுவார்.  ஆனால் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்பதை இப்போதைக்கு அறிவிக்க முடியாது.  பிரபாகரன் மக்கள் முன் ஆஜராகும்போது தமிழக அரசு அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இலங்கையில் தமிழ் ஈழம் அமையப் பாடுபட்டவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அரசால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள், மகன்கள் அந்தப் போரில் கொல்லப்பட்டதாக அப்போதைய அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு உறுதிப்படுத்தியது. 


இந்நிலையில், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் தமிழீழம் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடுவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார் உடன் இருந்தவர்கள்துணைத் தலைவர் முருகேசன் செயலாளர் குபேந்திரன் பொதுச்செயலாளர் ஜான் கென்னடி, கவிஞர் காசிநாதன் துரை மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad