கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவில் உண்டி கோல் போட்டி.
கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவில் உண்டி கோல் போட்டியானது நடைபெற்றது. இப் போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளும் மாணவர்களுக்கு தனியாகவும், மாணவியர்களுக்கு தனியாகவும் நடைபெற்றது.
எதிரே இருக்கும் பலகையினை குறி வைத்து சரியான முறையில் சரியாக அடிப்பவர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஐந்து முறைகள் வழங்கப்பட்டன. ஐந்து முறைகளில் அதிக முறை வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவதாக வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாவதாக வெற்றி பெற்றவர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களையும் ஊக்கப்படுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும் பள்ளி தாளாளர் கார்த்திகேயன் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment