ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பேராவூரணி வட்டார வள மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 7 February 2023

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பேராவூரணி வட்டார வள மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பேராவூரணி வட்டார வள மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி 


புதிய பாரத எழுத்தறிவு இயக்கம் சார்பில் பேரணி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி  உதவி தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி தொடங்கி வைத்தார்.வட்டார கல்வி அலுவலர்கள் அங்கயர்கண்ணி மற்றும் கலாராணி ஆகியோர் தலைமை வகித்தனர். 



வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். பேராவூரணி ஒன்றியத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுத படிக்கத் தெரியாதவர்கள் இருந்தால் அவர்களுக்கு இத்திட்டத்தில் கற்றுத்தருவதற்காக 40 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


இது குறித்த விழிப்புணர்வு மற்றும் துண்டு பிரசுரம் வினியோகம் சார்ந்த ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி கடைத்தெரு சாலை வழியாக ஊராட்சி மன்ற அலுவலம் வரை சென்று திரும்பியது.



ஊர்வலத்தில் பங்குபெற்ற மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகள ஏந்தியவாறு முழுக்கங்களை எழுப்பியபடியும் , துண்டு பிரசுரம் வினியோகம் வழங்கியபடியும் சென்றனர். ஊர்வலத்தில் ஆசிரியர்கள் கார்த்திகேயன், சித்ராதேவி , ஜெசிந்தா மேரி, செந்தில்குமார், ஆனந்தராஜ் மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் இராமநாதன் ஆகியோர்களும்,  பேரணியில் கலந்து கொண்டனர். 


பேரணியின் பாதுகாப்பை காவல் ஆய்வளர் ஜெயா , தலைமை காவலர் உதயன், காவலர் தினேஷ் ஆகியோர்கள் வழங்கினர்.இந்த பேரணியினை ஆசிரியப் பயிற்றுநர்கள் சரவணன், முனிராஜ், மற்றும் சிவமுருகன் ஆகியோர்கள் ஒருங்கிணைத்தனர்.


செய்தியாளர் த.நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad