தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை கால்வாயில் தண்ணீர் இல்லாமல் கதிர்வரும் நிலையில் காயுவதை கண்டித்து கருகும் பயிர்களை காப்பாற்ற விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்கக்கோரியும் பூதலூர் நான்கு சாலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன் தலைமையில சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
சுந்தர வடிவேல் ஆறுமுகம் தமிழ்ச்செல்வி பாஸ்கர் கெங்கைபாலு தமிழரசன் ராஜகோபால் ராஜு வின்சென்ட் கலையமுதன் கண்ணன் குணசேகரன் கருணாகரன் மெர்சி மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
போராட்ட இடத்தை வட்டாட்சியர் பார்வையிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார், வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகை தந்து பேச்சு வார்த்தைக்கு அழைத்ததன் பேரில் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எஸ் .டி .ஓ சீனிவாசன், காவல்துறை, வருவாய்த துறையினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment