தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மையத்தை, சுகாதாரத் துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
தஞ்சை மாநகரில் பன்முக சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழா நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மேம்பட்ட பேச்சு சிகிச்சை மையத்தை, தமிழக அரசின் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சென்னை போன்ற பெருநகரில் ஒரு பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையைத் தொடங்குவதும் நிர்வகிப்பதும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது, ஆனால் மூன்றாம் நிலை நகரமாக இருந்தாலும் இங்கு மீனாட்சி மருத்துவமனை நிறுவப்படுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அது மட்டுமின்றி, டெல்டா பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களின் சிகிச்சைக்கு விருப்பமான மருத்துவமனையாக இது உருவெடுத்துள்ளது. அது அதன் பெருமையைக் காட்டுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாரடைப்பு போன்ற அவசர நிலை ஏற்படும் போது, நோயாளிகளை சென்னை போன்ற நகரங்களுக்கு அழைத்துச் செல்லும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
ஆனால், தற்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இருப்பதால், தஞ்சை மாநகரில் உயர்மட்ட மருத்துவ சிகிச்சையை உரிய நேரத்தில் மிதமான செலவில் பெற முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்றுள்ளனர்
6 அடுக்கு பாதுகாப்பு குறிப்பாக 2018 கஜா புயலால் டெல்டா பகுதியில் வீடுகளை இழந்த மக்களுக்கு இலவச வீடுகள் கட்டிக்கொடுத்து, விவசாயிகளுக்கு இலவச தென்னை மரக்கன்றுகளை வழங்கி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்ததற்காக மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கரை பாராட்டுகிறேன்.
இந்த மருத்துவமனையும் அதன் மருத்துவர்களும் கோவிட் தொற்றுநோய்களின் போது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும் பணியைச் செய்துள்ளனர்.
மருத்துவமனை 6 அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு தொற்று அபாயம் இல்லாத பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.
No comments:
Post a Comment