தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் இலக்கியக் கருத்தரங்கு நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி போப் ஜான்பால் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நினைவைப் போற்றும் வகையில் இலக்கியக் கருத்தரங்கம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஐ.சபீர்பானு அவர்கள் வரவேற்றுப் பேசினார். இக்கருத்தாங்கில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் தலைமை வகித்து அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்த நாள் முன்னிட்டும் தமிழறிஞர்கள் உமறுப்புலவர். தாயுமானவர் ,கநா.சுப்பிரமணியம் க.வெள்ளை வாரணனார், ஆகியோரின் நினைவு போற்றும் வகையில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்குப் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி விழாவில் உரையாற்றினார்.
தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக பதிவாளர் முனைவர் சி.தியாகராஜன் முன்னிலை வகித்தார் . அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியின் தளாளர் அருட்தந்தை முனைவர் ச.செபஸ்டின் பெரியண்ணன்,
முதல்வர் பி . பிலோமிநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
முனைவர் தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களை சிறப்பிக்கும் வகையில் இப்பொருண்மைத் தொடர்பில் முனைவர் அசையத் ஜாகீர் ஹசன் அவர்கள் தமிழறிஞர் உமறுப்புலவர் பற்றியும் , முனைவர் சை .சற்குணன் அவர்கள் தமிழறிஞர் தாயுமானவர் பற்றியும், தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் இயக்குநர் .கூவ.எழிலரசு அவர்கள் தமிழறிஞர் கநா.சுப்பிரமணியம் பற்றியும், அரசர் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் சண்முக செல்வகணபதி அவர்கள் .க.வெள்ளைவாரணனார் அவர்களின் தமிழ் பங்களிப்பு பணியினை பற்றி
கருத்து தெரிவித்தார்கள். மேற்கண்ட கருத்தரங்கில்
தஞ்சாவூர் மாவட்ட தலைவர், மூத்த தமிழறிஞர்கள், தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment