தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர அலுவலகம நுழைவாயில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் 2 முறை ரசீது பதிவு செய்வதை ரத்து செய்து ஒரு பதிவில் 2 குறுஞ்செய்தி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பதிவுக்கும், 2-வது பதிவுக்கும் 5 நிமிட கால அவகாசத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம்கார்டுகள் வழங்க வேண்டும்.
சிறப்பாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக 1 ரேஷன் கார்டுக்கு ரூ.10 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சை மாவட்ட தலைவர் எஸ் .அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜி.கரிகாலன் வரவேற்புரை ஆற்றினார் . தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் வி.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு நியாயவிலை கடை பணியாளர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் எம். ராமலிங்கம் ,ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட பொறுப்பாளர்கள் முருகானந்தம்,வைத்திலிங்கம் சகாயம் தமிழரசன் , அமிர்தம் , சங்கர் , அறிவு இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் மாவட்ட. பொருளாளர் ஜே ஜே.ராமலிங்கம் நன்றி கூறினார்

No comments:
Post a Comment