அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் திருக்கோவில் திருமூலரின் திருமந்திரம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 30 January 2023

அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் திருக்கோவில் திருமூலரின் திருமந்திரம்.

அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் திருக்கோவில் திருமூலரின் திருமந்திரம். 


தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஐயாரப்பர் திருக்கோவில் திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை, அன்னை காவிரி ஆரத்தி வழிபாட்டு குழு சார்பில் பத்தாம் திருமுறை திருமூலர் அருளிய திருமந்திரம் முற்றோதல் தருமை ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன் வடக்கைலாய வளாகத்தில் நடந்தது திருமூலர் அருளிய திருமந்திரம் 3,000 அகண்ட பாராயணம் பண்முறையில் திருமந்திரம் இசைமாமணி சிவத்திரு தாயுமானவர் இசையுடன் பாடினார்.


இதில் திருவையாறு சுவாமி  சங்கர சித்தேஸ்வராநந்தபுரி, விஷ்ணும்பேட்டை சுவாமி ஸர்வாநந்தபுரி , முனைவர் வாசியோக சிவமல்லிகா, வடகயிலாய சிவனடியார் கூட்டம் பழனிநாதன், ஐயாறப்பர் அப்பூதியடிகள் திருச்சபை தலைவர் வேலாயுதம், கல்யாணபுரம்  திருவாசகமுற்றோதல் குழு பொறுப்பாளர் திலகர், சித்தர்மடம் சோமசுந்தரம் , நடுக்காவேரி அப்பர் திருமடம் ஒதுவார் ஆதிமூலம், பேரூராட்சி 13-வது வார்டு கவுன்சிலர் நாகரெத்தினம், முருகானந்தம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவிரி ஆரத்தி வழிபாட்டு குழு மணிகண்டன், சசிகுமார், சேதுராம பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad