தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வையிழப்புதடுப்பு சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைவர் கணேசன் தலைமை வகித்தார், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கிளாடில் முன்னில வகித்தனர்.
இதில் திட்ட இயக்குனர் இராமகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்கள் கருணா, கோடீஸ்வரன், தொன்போஸ்கோ, குமாரவேல் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
முகாமில் கலந்துகொண்ட 149 நபர்களுக்கு சங்கராமருத்துவமனை மருத்துவ குழுவினர் திருவையாறு ஜாய் நர்சிங் கல்லூரி மாணவிகள் உதவியுடன் கண் பரிசோதனை மேற்கொண்டதில் 92 நபர்கள் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு கோவை சங்கரா மருத்துவமனைக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

No comments:
Post a Comment