திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
திருவையாறு கல்யாணபுரம் 2-ம் சேத்தி வீரசிங்கம்பேட்டை இளமாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் புண்ணியமூர்த்தி சர்வே எண் 226/26 வீட்டு மனையை அளக்க பணம் கட்டி விண்ணப்பம் செய்து ஆண்டுக்கணக்கில் சர்வே பிரிவில் கிடப்பில் போடப்பட்டுள்ளதை கண்டித்தும், அருகில் உள்ள தென்னந்தோப்பு தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுவதால் வீட்டின் ஓடு உடைவதும் என்று குடியிருக்க முடியாத பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பல ஆண்டுகளாய் தீர்க்க நடவடிக்கை எடுக்காத வருவாய்துறையினரை கண்டித்து திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய குழு பழனிஅய்யா, ராம், பிரதீப்ராஜ்குமார், மதியழகன், சுதிரவன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தாசில்தார் பழனியப்பன், போலீஸ் எஸ்ஐ அப்பர் மற்றும் அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலம் ஏற்கெனவே அளவீடு செய்யப்பட்டுவிட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் தென்னைமரங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளர் 15 நாட்களில் அப்புறப்படுத்துவார் தவறும்பட்சத்தில் வருவாய்துறையினரால் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
No comments:
Post a Comment