அரசு பள்ளியில் இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் திறப்பு.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வசதி செய்து தர வேண்டும் என மாணவர்கள் .ஆசிரியர் கள் பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதை ஏற்றுக் கொண்ட அவர் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டது. புதிய இருசக்கர வாகன நிறுத்தும் இடத்தை எம்.எல்.ஏ.அசோக்குமார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம்மூர்த்தி .மடத்திக்காடு ஊராட்சி தலைவர் சுதாசினி சுப்பையன் .பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளங்கோவன். வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி செயலாளர் ஆர்.கே.பி. குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: த.நீலகண்டன் .

No comments:
Post a Comment