பேராவூரணியில் " ழ" பவுண்டேஷன் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் - 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 22 January 2023

பேராவூரணியில் " ழ" பவுண்டேஷன் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் - 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

பேராவூரணியில் " ழ" பவுண்டேஷன் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் 2500 க்கும் மேற்பட்டோர் போட்டியாளர்கள் பங்கேற்பு. எம்எல்ஏ அசோக்குமார் தலைமையில் நடந்தது.



தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் "ழ" பவுண்டேஷன் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்  நடைபெற்றது. இதில் ஆண்கள் ,பெண்கள் மற்றும் 10 வயது உட்பட்டோர் என 4 பிரிவுகளில் நடத்தப்பட்டது. போட்டிகளை பேராவூரணி தொகுதி எம்எல்ஏ என்.அசோக்குமார் தலைமை ஏற்று,கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மருத்துவர் ஏ ஜீவகன் ,கோட்டாட்சியர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர், மணமேல்குடி பெருந்தலைவர் கார்த்திகேயன், வர்த்தகர் சங்க கட்டுப்பாட்டு கமிட்டி கந்தப்பன், சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி. முத்துமாணிக்கம், மாவட்ட அவைத் தலைவர் சுப.சேகர், வழக்கறிஞர் குழ.செ.அருள்நம்பி, கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர் பி ராஜேந்திரன், மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன், கைஃபா வே .கார்த்திகேயன் ,திமுக ஒன்றிய பொறுப்பாளர்கள்
க. அன்பழகன் ,வை. ரவிச்சந்திரன், மாநில மீனவர் அணி ஜெயபிரகாஷ், பெருமகளூர் நகரச் செயலாளர் மாரிமுத்து மாவட்ட பொருளாளர் அஸ்லாம் பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத் மாவட்ட கவுன்சிலர்கள் மூர்த்தி .சுவாதி காமராஜ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலக விளையாட்டு திடலில்  இருந்து  5 கிலோ மீட்டர் தூரம் என நிர்ணயிக்கப்பட்டு மாரத்தான் ஓட்டபோட்டி நடைபெற்றது .போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை மற்றும் பேராவூரணி தொகுதி எம்எல்ஏ என்.அசோக்குமார் ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர், காதல் கோட்டை அகத்தியன் கலந்து கொண்டார் .மேலும் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவருடன் 11 சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை நிறுவனர் கார்த்திஅசோக்குமார், தலைவர் டாக்டர், துரை .நீலகண்டன் செயலாளர் டாக்டர் எஸ்.ஆர் .சந்திரசேகரன், துணைச்செயலாளர் சிவ .சதீஷ்குமார், துணைப் பொருளாளர் எ .சபரிகுமார்,ஒருங்கிணைப்பாளர்
எஸ் சோலைமலை,துணை ஒருங்கிணைப்பாளர்மருது.
உதயகுமார்,என் அருண், சட்ட ஆலோசகர்கள்
ஆர். பி .மணிகண்டன்,  பி.கரிகாலன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் .கே.கே.கே.செந்தில்குமார், ஆண்டிக்காடு தேவா மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.


செய்தியாளர்
த.நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad