தஞ்சையில் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவில் ஏ. என் .உமாபதி (முன்னாள் கவுன்சிலர் ) தலைமை தாங்கினார். சங்க செயலாளர் எம் கே தியாகராஜன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட விவேகானந்தர் சேனா சமதி, தலைவர் எம் எஸ் ராமலிங்கம், சௌராஷ்ட்ரா ஸ்பை முன்னாள் தலைவர் எம்.எஸ் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய தமிழக அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற ஆதி நெடுஞ்செழியன் பேசியதாவது:
திருக்குறளின் வாழ்வியல் முறைகள், உளவியல் அம்சங்கள், வேளாண்மைத் தொழில் பெருமைகள் ஆகியவற்றைப் பாடி, அன்றாட முன்னேற்றம் மற்றும் குறளை அனைவருக்கும் பரப்பும் வகையில் விளக்கி சிறப்புரையாற்றினார்.சங்கத் துணைச் செயலாளர் பி ஏ குப்புராமன் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment