போரில்லாத ஓருலகம் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர் மாநகர தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் பேராசிரியர் ந.சேதுரகுநாதன் எழுதிய போரில்லா ஓலகம் என்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி பெசன்ட் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாரத் கலை அறிவியல் கல்வி குழுமத்தின் தலைவர் புனிதா கணேசன் அவர்கள் தலைமையேற்று , நூலை வெளியிட்டார். கரந்தை தமிழ்வேள் உமா மகேசுவரனார் கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் இரா.ராசாமணி அவர்கள் நூலை பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி போரில்லா ஓருலகம் நூலை அறிமுகம் செய்து உரையாற்றுகையில், போரில்லாத உலகம் வேண்டி , மரபு நடையில் ஆழ்ந்த புலமையோடு எழுதப்பட்ட நூல் ,. அது மட்டுமல்லாமல் சாதி,மதம்,இனம் அற்ற பொதுவுடமை சமுதாயம் அமைய வேண்டும், உலக மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் சிறப்பு வாய்ந்ததாகும் என நூலை பற்றி குறிப்பிட்டார் . நிகழ்வில் பேராசிரியர் இ.முத்தையா , மருத்துவர் சே.திருமாவளவன், பேராசிரியர் சே.ஜெகந்நாதன், பேராசிரியர் சே.மதியழகன் , பேராசிரியர் து.பரமேஸ்வரி, பேராசிரியர் தயா.சியாமளா உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிறைவாக முனைவர் சு.மகேஸ்வரி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் கரந்தை கல்லூரி தமிழ் துறை உதவி பேராசிரியர் சா.கிருத்திகா அனைவரையும் வரவேற்றார்.முடிவில் மருது பாண்டியர் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் தி.சங்கீதா நன்றி கூறினார்.

No comments:
Post a Comment