கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்கம் விளையாடும் போட்டி நடைபெற்றது. போட்டியில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன் பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கினார்
மேலும் மாணவ மாணவியர்கள் அனைவரையும் ஊக்கப்படுத்தும் விதமாக சான்றிதழ்களை பன்னாட்டு பள்ளி தாளாளர் திருமதி பூர்ணிமா கார்த்திகேயன் வழங்கினார்
இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் ஆசிரியைகளை பள்ளி முதல்வர் டி அம்பிகாபதி பாராட்டி நன்றியை தெரிவித்தார்
இந்த போட்டியானது மாணவர்களின் அறிவுத்திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் எனவும், மாணவர்களின் எதிர்கால கல்வி சிறப்பாக அமையும் என்று கார்த்திக் வித்யாலயா பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் தெரிவித்தார்

No comments:
Post a Comment