பேராவூரணியில் பொங்கல் பரிசு தொகுப்பை பேருராட்சி தலைவர் சாந்திசேகர் வழங்கினார்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணிஅங்காடிகளில் வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பான ரூ 1000 பணம், பச்சரிசி, கரும்பு ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர் தலைமை வகித்தார்.
கூட்டுறவு சார்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) அ.அறிவழகன் ,கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர் பாலச்சந்தர், டி எஸ் ஓ அருள்மணி, கூட்டுறவுசெயலாளர் ஆர்.தெட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொங்கல் பரிசு தொகுப்பை பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்திசேகர் பயனாளிகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார் .
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் என். செல்வராஜ்,பொதுக்குழு உறுப்பினர் அ. அப்துல்மஜீத், அச்சகம் கோ நீலகண்டன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பழனிவேல்சங்கரன், மகாலட்சுமி சதீஷ்குமார், முருகேசன் வி.ப.நீலகண்டன், பழனியம்மாள் நீலமேகம் முகமதுபாரூக், ஆர். கே. ராஜேந்திரன், மற்றும் அவைத்தலைவர் நீலகண்டன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.ஏ.சாத்தையன், பி.கருப்பையன், சி..நீலகண்டன், கோவி.நீலகண்டன், அட்வகேட் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்

No comments:
Post a Comment