தஞ்சை ரயில் நிலையம் அருகே விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர் மாவட்டம் கொலை வன்கொடுமை மற்றும் கஞ்சா போதை பொருள் வழக்குகளில் லஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளை விடுதலை செய்த தஞ்சாவூர் மாவட்ட பி. சி. ஆர். நீதிமன்ற நீதிபதி ரவி அவர்கள் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மண்டல செயலாளர். விவேகானந்தன் கூறும்போது. தஞ்சை முனியாண்டர் காலனியில் வசித்து வந்த அலெக்ஸ் என்பவர் 2008 ஆம் ஆண்டு அருள் தியேட்டர் அருகே அவரது மனைவி கண் முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் தீர்ப்பானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி வழங்கப்பட்டது . 10 பேர் மற்றும் அவரது மனைவி சாட்சியம் அளித்தும் கொலை சுமத்தப்பட்ட 11 பேரையும் பி .சி .ஆர் நீதிமன்ற நீதிபதி ரவி விடுதலை செய்துள்ளார். இதற்காக குற்றவாளிகளிடம் இடைத்தருவர்கள் மூலம் ரூபாய் 30 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
இதுபோல பல்வேறு குற்ற வழக்குகளில் சரியான தீர்ப்புகளை வழங்காமல் பணம் பெற்றுக் கொண்டு குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் என்றும் இவர் சமீபத்தில் கூறிய தீர்ப்புகள் அனைத்தையும் மறு விசாரணைக்கு உட்படுத்தி நீதி வழங்க வேண்டும் என்றும் கூறினார்.
இவ்வாறு தவறான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி ரவி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறைபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில். மாவட்டச் செயலாளர்கள். சொக்கா.ரவி .தங்க.முருகானந்தம். மாநிலச் செயலாளர்கள் வீரன் வெற்றிவேந்தன் .கோ ஜெய்சங்கர் .சிவா தமிழ் நீதி. மற்றும் மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன். முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழருவி. தொகுதி செயலாளர்கள். திருவையாறு கதிரவன். பாபநாசம் தமிழன். வல்லம் அந்தோணி. நகரச் செயலாளர் தமிழ் முதல்வன். பாராளுமன்ற தொகுதி துணைச் செயலாளர். கிள்ளிவளவன்.
ஒன்றிய செயலாளர்கள். செந்தில் சிலம்பரசன் உ. சிவாஜி. அன்பு என்கின்ற ஆண்டவன். மாவட்ட அமைப்பாளர்கள். ஆ யோகராஜ். ரகு. நாக.மணியரசன். கட்சியின் பொறுப்பாளர்கள் சன் செல்வகுமார் பெரியார் வளவன் ஆர்பி முருகேசன் குருங்குளம் முருகானந்தம்
பூ .தனியரசு. கரந்தை பெனிடிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவல்துறையின் அனுமதி பெறாமல் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தினால் வி.சி.க. பொறுப்பாளர்கள் 30க்கும் மேற்பட்ட வரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

No comments:
Post a Comment