தஞ்சையில் இருப்புப்பாதை காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் திருவிழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 8 January 2023

தஞ்சையில் இருப்புப்பாதை காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் திருவிழா

தஞ்சையில் இருப்புப்பாதை காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல்  திருவிழா.



தஞ்சாவூர் மாவட்டம் ஜனவரி-8 பொங்கல் பண்டிகை நாளில் கூட பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் போலீசார் இருப்பதால், காவலர் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.
 
பணிச்சுமைகளுக்கு இடையே கடமை முக்கியம் எனக் இருக்கக் கூடிய காவலர்கள் விழாக்களை குடும்பத்தோடு கொண்டாடுவது கடினம். அந்த மனக்குறையை தீர்க்கும் வகையில் தஞ்சாவூர் இருப்புப்பாதை காவலர் குடியிருப்பில் 4-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  இந்த விழாவிற்கு காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். ஆய்வாளர்கள் சிவ வடிவேல் , சாந்தி உதவி ஆய்வாளர் செந்தில் வேலன்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்.போலீசார் அனைவரும் ஒரே கலரில்  வேட்டி, சட்டையும், பெண் போலீசார் ஒரே கலரில் சேலையும் அணிந்து அவர்களது  காவலர் குடியிருப்பில் அவர்களது குடும்பத்தினருடன் சமத்துவ பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்
காவலர் குடியிருப்பை சேர்ந்த பெண்கள் கும்மி அடித்தும், உறி விளையாடியும் மகிழ்ச்சி அடைந்தனர். குழந்தைகளின் கோலாட்டம், பெண்களின் கோலப்போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் விளையாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விளையாட்டில் வெற்றி பெற்ற அனைவரும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள் ,முதல் நிலை காவலர்கள், மற்றும் காவலர்கள்  அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் சமத்துவ பொங்கல் விழாவை  சிறப்பாக கொண்டாடினார்கள்

No comments:

Post a Comment

Post Top Ad