திருவையாறு புறவழிச்சாலைக்கு விளை நிலங்களை எடுக்கக் கூடாது என விவசாயிகள் மனு அளித்தனர்
திருவையாறு அருகே கண்டியூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புறவழிச்சாலை விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு வந்திருந்த நில எடுப்பு மற்றும் கோட்டாட்சியர் மணிமேகலை தஞ்சை நில எடுப்பு வட்டாட்சியர் அனிதா ஆகியோரிடம் புறவழிச்சாலைக்கு விளை நிலத்தை எடுக்க கூடாது என்று விவசாயிகள் மனு அளித்துள்ளனர். திருவையாறு போக்குவரத்து நெரிசலை தீர்க்க புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த மாதங்களில் தொடங்கி நடை பெற்று நடைபெற்று வந்தது.
இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சாலை அமைக்க பயிர்களை மண் கொட்டி மூடுவது உயிரை மண்ணில் புதைப்பது போல் உள்ளது என்று கூறி பல கட்ட போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்துக்கொள்ளாத விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர். இதனை இடையே கல்யாணபுரம் 1ம் சேத்தி விவசாயிகளை நேரில் வரவழைத்து விசாரணை செய்ய கண்டியூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு திருவாரூர் மாவட்ட நிலை எடுப்பு மற்றும் வருவாய் கோட்டாட்சியர் மணிமேகலை, தஞ்சை நில எடுப்பு வட்டாட்சியர் அனிதா ஆகியோர் வருகை தந்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். விவசாயிகள் தங்களுடைய கோரிக்கைகளை மனு மூலமாக அளித்தனர்.
நாங்கள் விளை நிலத்தை ஒருபோதும் கொடுக்க மாட்டோம் முகப்போகம் முக்கனிகள் விளையக்கூடிய நிலங்கள் பாலைவனமோ வானம் பார்த்த பூமியோ கிடையாது பசுமை நிறைந்த எங்கள் பகுதியை சாலை அமைத்து சாக்கடையாக மாற்றக்கூடிய அளவிற்கு இந்த புறவழிச்சாலை தேவை இல்லை.
கண்டியூர் திருவையாறு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் மட்டும் போதுமானது இல்லை எனில் சென்னை, சேலம், கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் அமைத்துள்ள மேம்பாலங்கள் போல் அமைத்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யலாம் இதற்கு மத்திய, மாநில அரசுகள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். விளை நிலையங்களை அழிக்காமல் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்து சென்றனர். விவசாயிகளும் நாங்கள் ஒருபோதும் எங்கள் விளை நிலங்கள் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கொடுக்க மாட்டோம் என்று உறுதியுடன் கூறி வெளியே சென்றனர்.

No comments:
Post a Comment