திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி வயல் தின விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 24 January 2023

திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி வயல் தின விழா.

திருவையாறு வட்டாரத்தில் வயல்வெளி பள்ளி வயல் தின விழா.


திருவையாறு வட்டாரம் மரூர் கிராமத்தில் தமிழ்நாடு நீர்வள திட்டத்தின் கீழ் விவசாயிகள் வயல் வெளிப்பள்ளி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வயல்வெளி பள்ளியின் இறுதி பகுதியாக வயல் தின விழா இன்று நடைபெற்றது. 



இதில் கலந்துகொண்டு திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா பேசுகையில் தற்பொழுது நெல்லுக்கு பின் உளுந்து சாகுபடி முனைப்பு இயக்கம் அனைத்து கிராமங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நெல்லுக்கு பின் சோயா பீன்ஸ் சாகுபடியும் அரசு மூலம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. 


இதற்கென உளுந்து மற்றும் சோயா விதைகள் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட ஏதுவாக அனைத்து விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின் உளுந்து சாகுபடி மேற்கொண்டு அதிக லாபம் அடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 


இந்த வயல் தின விழாவிற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன், உதவி வேளாண் அலுவலர் கவிதா ஆகியோர் செய்து இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad