கருவேல மரங்களை அகற்ற வேண்டும் : சமூக ஆர்வலர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் தமிழக அரசுக்கு வேண்டுகோள்.
தமிழகம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை அனைவரும் ஒன்றிணைந்து வேரோடு அகற்ற வேண்டும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் சமூக ஆர்வலர் லயன்.தூதர்.டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் லயன்.தூதர். டாக்டர்.இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ் தஞ்சையில் செய்தியாளரிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 1960ஆம் ஆண்டு சீமை கருவேல மரங்கள் வேலிக்காக விதைகளை கொண்டு நடப்பட்டது. இதையடுத்து இந்த சீமை கருவேல மரம் மாநிலம் முழுவதும் தீயாக பரவியுள்ளது.
இந்த சீமை கருவேல மரங்கள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன் டைஆக்ஸைடை வெளியிட்டு வருகிறது. மழை பெய்வது தடுக்கப்படுகிறது.
மேலும் நிலத்தடி நீரையும் இருந்த சீமை கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகின்றன. கருவேல மரங்களின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதனை விறகுகளாக பயன் படுத்தி வந்தனர். வெளி நாடுகள் கருவேல மரங்கள் அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றும் கருவேல மரத்தை அழிப்போம்! மண் வளத்தை காப்போம்!! நீர் வளத்தை பெருக்குவோம்!!! விவசாயத்தை வளர்ப்போம் என கூறினார்

No comments:
Post a Comment