தஞ்சையில் சன் ரைஸ் நர்சரி பள்ளியில் ஆண்டு விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 31 January 2023

தஞ்சையில் சன் ரைஸ் நர்சரி பள்ளியில் ஆண்டு விழா.

தஞ்சையில் சன் ரைஸ் நர்சரி பள்ளியில் ஆண்டு விழா


தஞ்சாவூர் மனோஜிப்பட்டியி.ல் 'சன் ரைஸ் நர்சரி மற்றும் பிரைமரி  பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா சனிக்கிழமை  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்  தலைமை ஆசிரியர் பாத்திமுனிஷா தலைமை வகித்தாா். புல்வர் கோபாலகிருஷ்ணன் விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து  மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, போட்டிகளைத் தொடங்க வைத்தாா்.

தொடர்ந்து மாணவ மாணவிகள் பல விளையாட்டுப் போட்டிகளில் நடன கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருச்சி மாநகர காவல்துறை உதவி ஆணையர் சுபாஷ் சந்திரபோஸ் தஞ்சை பிரப்பாட்டி உரிமையாளர் விஜயராகவன், இளைஞர் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் ரமேஷ் ,ராஜராஜன் மகளிர் சுய உதவி குழு சார்பாக திருமதி ராமஜெயம் மல்லிகா ஆகியோர் கலந்து கொண்டு பல விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றி பாராட்டினார்கள் .இறுதியில்  பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு அவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் வீட்டுக்கு சென்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad