தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி சாதனை - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 31 January 2023

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி சாதனை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்  பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி மாணவி சாதனை



தஞ்சாவூர், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி கணினி அறிவியல் துறையில் மூன்றாமாண்டு பயிலும், செல்வி எஸ்.குணவர்த்தினி தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்
சாதனைப் படைத்துள்ளார். கடந்த ஜனவரி 21-ஆம் தேதி பூடானில், நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்திய அணியின் சார்பாகப் பங்குப்பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

வெற்றி வாகை சூடி நாட்டிற்கும், எமது சார்பாக கல்லூரிக்கு பெருமை  சேர்த்த மாணவி எஸ்..குணவர்த்தினியைக் கல்லூரியின் இயக்குநர் அருட்சகோதரி டெரன்சியா மேரி, கல்லூரியின் முதல்வர் முனைவர் S.காயத்ரி , ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி சிறப்பு செய்தனர். மாணவிக்குக் கல்லூரியின் தலைவர், செயலர், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவிகள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad