தஞ்சைத்தமிழ மன்றம் நான்காம் ஆண்டு விழா:15 நூல்கள் வெளியிடு.
தஞ்சை பெசண்ட அரங்கில் தஞ்சை தமிழ் மன்றம் நான்காம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக, ஞாயிற்றுக்கிழமை காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி,இசை நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் பெண் கவிஞர்கள் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்
தொடர்ந்த விழாவில் தஞ்சை மன்றத்தலைவர் கோவிந்தராசன் பாலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இரா. வேல்முருகன் வரவேற்று பேசினார். கோவை அரசு இசை கல்லூரி முதல்வர் ஆ.வி.செ .சிவகுமார் நிலாமுற்றம் அறக்கட்டளை நிறுவனர் முத்துப்பேட்டை மாறன் , ,திருச்சி தொழிலாளர்ஆய்வாளர் ராணி லட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், கண்ணதாசன் ,காவேரி மைந்தன், தமிழ் இயலன உள்ளிட்டோர்,சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழாவில் பெண்ணகடம் நீலமேகம், சென்னை மருத்துவ ஜெயக்குமார் பலராமன் ,மதுரை பேராசிரியர் இளஞ்செழியன், புதுவை மணி வேலர், மதுரை பரணி சுப சேகர் , சென்னை சீனி பழனி மற்றும் ஓசூர் மணிமேகலை ஆகியோருக்கு கம்பதாசன விருதும் ,திருச்சி தாயுமானவர் தஞ்சை கோவிந்தராஜன் ஆகியோருக்கு வில்லிசை சக்கரவர்த்தி வலங்கைமான் சண்முக சுந்தரனார் விருதும்,சென்னை காவிரி மைந்தன், தமிழ் இயலன், ,தம்பியின் தம்பி மதுரை முத்து , புதுவை வேல்முருகன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
பாலு கோவிந்தராஜன் தலைமையில் திருக்குறள் கவியரங்கமும் இராம வேல்முருகன் தலைமையில் சிந்துக் கவியரங்கம்மும் நடைபெற்று 60 கவிஞர்கள் கவிதை பாடினார்.
தமிழகமெங்கில் இருந்து வருகை தந்த 120 தமிழ் ஆர்வலர்கள் தமிழ் வேல்திருக்குறள் முரசு கல்வி ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன பிரான்ஸ் தமிழ் நெஞ்சம் இதழ் சார்பாக 12 கவிஞர்களுக்கு வெண்பா அரசு விருந்து வழங்கப்பட்டது. விழாவில் நிலா முற்று நிறுவனர் முத்துப்பேட்டை மாறன் தமிழினை தமிழ் சங்க நிறுவனர் கருங்கல் கண்ணன் தமிழ்நாடு புலவர் பெருமைத் தலைவர் வேதரத்தினம் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பதினைந்து நூல்கள் வெளியிடடு சலுகை விலையில் ரூபாய் 10000 க்கு நூல் விற்பனையாயின.பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர் பொலிகையூர் கோகிலாவின் காற்றின் மொழி என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர்கள் தமிழின்பன் சண்முகம் ஆகியோர் செய்திருந்தினர்.இறுதியில்தினேஷ் டைலர் இளைய திபன், மகாலிங்கம் நன்றி கூறினார்

No comments:
Post a Comment