மருத்துவர் முனைவர் சு.நரேந்திரன் எழுதிய  தமிழ் வழிக் கல்வி  நூல் வெளியீட்டு விழா - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 28 January 2023

மருத்துவர் முனைவர் சு.நரேந்திரன் எழுதிய  தமிழ் வழிக் கல்வி  நூல் வெளியீட்டு விழா

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தாய்மொழியான தமிழுக்கு எதிரான இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.  


தற்போது, ​​மத்திய அரசு, தாய்மொழியான தமிழை அழிக்கும் வகையில், தமிழக கலாசாரத்துக்கும், கலாசாரத்துக்கும் எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.  ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகள் தாராளமயமாக்கப்படுகின்றன.  இந்நிலைகளை மாற்ற தமிழகம் தாய்மொழியான தமிழில் கல்வி கற்று, தமிழ்ப் பண்பாட்டைக் காத்து, இந்தி, சமஸ்கிருத மொழிகளின் ஆதிக்கத்தில் இருந்து தாய்மொழியான தமிழைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும்.  கட்டாயம் உள்ளது.  தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் சார்பில், தஞ்சை மாவட்ட தமிழ் வழிக் கல்வி இயக்கம் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினரிடையே தாய்மொழி தமிழின் பெருமையை சென்றடைய பாடுபட்டு வருகிறது.  இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் மாவட்ட தமிழ் வழிக் கல்வி மூன்றாம் கருத்தரங்க மாநாடு தஞ்சாவூர் வெண்ணாட்டங்கரை என்.எம்.வெங்கடசாமி நாடார் கல்லூரியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

கோயமுத்தூர் பேரூர் சாந்த லிங்க அடிகள் திருமடத்தின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.முதல் நிகழ்வாக  மருத்துவர் சு.நரேந்திரன் எழுதிய தமிழ் வழிக் கல்வி கனவா? நனவா? நூல் வெளியிடப் பட்டது.நூலை மாநாட்டின் தலைவர் சாந்தலிங்க மருதாசல அடிகளார் வெளியிட, மருத்துவர் இரா. இளங்கோவன்  பெற்றுக் கொண்டார் .நூலை வெளியிட்டு  சாந்தலிங்க     மருதாசல அடிகளார் தலைமையுரை ஆற்றினார்.   மாநாட்டின் நோக்கம் குறித்து மருத்துவர் சு.நரேந்திரன் விளக்கி பேசினார்.சென்னை செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சிறப்பு நிலை பேராசிரியர்      முது முனைவர் பா. மருதநாயகம் சிறப்புரையாற்றினார்.  கருத்தரங்க இரண்டாம் அமர்வில் உலக நாடுகளில் தமிழ் வழி கல்வி என்ற தலைப்பில் திருச்சி அருள் முனைவர் அமுதன் அடிகளார்,தமிழ் வழிக் கல்வியும் போராட்டமும்  என்ற தலைப்பில் தமிழியக்கம் இணைச்செயலாளர் மு.இளமுருகன் ஆகியோர் உரையாற்றினார்கள்.  

கருத்தரங்கத்தின் மூன்றாம் நிகழ்வில் தமிழ் வழி கல்வி சிக்கலும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஈரோடு புதுமலர் இதழ் ஆசிரியர் கணகுறிஞ்சி,  தமிழ் வழிக் கல்வியும் தமிழறிஞர்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் தமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் பதிப்பாசிரியர் முனைவர் க.காமராசன் ஆகியோர்  உரையாற்றினார்கள். கருத்தரங்கத்தின் இறுதி அமர்வான நான்காவது அமர்வில் தமிழ் இயக்கம்  பொதுச்செயலாளர் முனைவர் கு. திருமாறன் தலைமை வகித்தார். திருவையாறு ஔவைக்கோட்டம் முனைவர் மு . கலைவேந்தன், தஞ்சாவூர் திருக்குறள் பேரவை நிர்வாகி புலவர் பா கந்தசாமி, பேராசிரியர் நா. பெரியசாமி ஆகியோர் உரையாற்றினார்கள். தாமரை இதழின் ஆசிரியர் சி.மகேந்திரன் மாநாட்டினை நிறைவு செய்து உரையாற்றினார். முன்னதாக பேராசிரியர் வி.பாரி  மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார். முடிவில் பேராசிரியர். சோ. கண்ணதாசன் நன்றி கூறினார். கருத்தரங்க மாநாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழில் பயிற்று மொழியாக வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது, தமிழ் வழி கல்விக்காக தமிழை கற்காமல் தமிழ்நாட்டில் பட்டம் பெற முடியாது எனவும், அரசு அலுவலர் தேர்வில் தமிழில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு அரசை இம்மாநாடு பாராட்டுகிறது.   அதில்  தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்  மட்டுமே இடம்பெற பார்த்திடல் வேண்டும் என்று அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது,, 


மருத்துவம் , பொறியியல்,.    வேளாண் அறிவியல் முதலிய துறைதோறும் தமிழை அறிவியல் மொழியாக பெரு நிதியை உருவாக்கி, கருவி நூற்களை தமிழில் உருவாக்கி வெளியிட்டு வரும் தமிழ்நாடு அரசை இம்மாநாடு பாராட்டு பாராட்டுகிறது, 20 22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் 47 ஆயிரம் பேர் தேர்ச்சி அடையாமை கண்டு மாநாடு பெறும் கவலை கொள்கிறது, இனிவரும் கல்வி ஆண்டில் தமிழை முழு நேரமாக பயின்று தமிழாசிரியர் தகுதி பெற்ற பல்லாயிரம் பேர் பணியின்றி வாடுவதை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு, இவர்களை   தமிழாறசிரியர் பணியிடத்தில் பணியாற்ற தடையாக உள்ள தமிழக அரசின் அரசாணை எண் 240, பள்ளி கல்வித்துறையின் நிலை எண் 100- பள்ளிகளில் துறை நாள் 27/6/2023 மாற்றிட தமிழக நாடு அரசை மாநாடு கேட்டுக்கொள்கிறது, தமிழ் வழி மருத்துவ படிப்பை தொடங்க  நிலம் ஒதுக்கியும்,.    நூறு நூல்கள் வெளியிட ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களின் தமிழ் பயிற்று முறை குறிக்கோளை மாநாடு வரவேற்கிறது, தமிழ் வழி மருத்துவக் கல்லூரியை தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கவும் மாநாடு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்  ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad