தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை வகித்தார். இதில் மாவட்ட அளவிலான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் என்.வி.கண்ணன், கக்கரை சுகுமாறன், கோவிந்தராஜன் உள்பட விவசாயிகள் பலர் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.பின்னர் மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, திருமண்டங்குடி சர்க்கரை ஆலையின் பழைய மற்றும் புதிய நிர்வாகத்தை கண்டித்தும், திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பிரச்னையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment