திருவையாறு தேரடிதிடலில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவையாறு தேரடிதிடலில் திருவையாறு ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் என்.இளங்கோவன் பூதலூர் ஒன்றியகழக செயலாளர் எம் ரத்தினசாமி (EX M.L.A), தஞ்சை ஒன்றிய கழகச் செயலாளர் நாகத்தி ஜி கலியமூர்த்தி ஆகியோர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சிறப்புரையாற்றிய கழக புரட்சித் தலைவி பேரவை துணை செயலாளர் கே ஜி முத்து வெங்கடேஸ்வரன் தலைமைகழக பேச்சாளர்கள் பா தில்லை செல்வம் ,அரங்க.சத்தியமூர்த்தி ,எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் எஸ். ராஜா கூட்டுறவு ஒன்றிய தலைவர் எஸ் .மோகன் ,மாவட்ட பொருளாளர் ஆர் பி கண்ணபிரான் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள், அப்போது வரும் 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் தமிழகத்திற்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது, மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வருவார், திமுகவினர் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தவில்லை என்று பேசினர்.
இக்கூட்டத்தில் திருவையாறு பேரூர் கழக செயலாளர் ஆர் செந்தில்மணி
வரவேற்புரையாற்றினார் திருவையாறு கூட்டுறவு சங்கத் தலைவர் ஆர் செந்தில்குமார் நன்றி உரையாற்றினார்
மற்றும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

No comments:
Post a Comment