கும்பகோணம் தாராசுரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
மறைந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தமிழகமெங்கும் நடைபெற்று வருகிறது .அதன் ஒரு பகுதியாக கும்பகோணம் தாராசுரம் கடைவீதியில் கும்பகோணம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது .கூட்டத்திற்கு சிறப்புரையாற்ற முன்னாள் உணவுத்துறை அமைச்சரும் கழக அமைப்புச் செயலாளருமான காமராஜ் மற்றும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டனர் .முன்னதாக நலிவடைந்த குடும்பத்தினருக்கு தையல் மிஷினை நலத்திட்ட உதவிகளாக வழங்கினர்
இந்த பொதுக் கூட்டத்தில் கும்பகோணம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் ,திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர்கள் ஏவிகே அசோக்குமார் ,முத்துகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

No comments:
Post a Comment