தமிழக அரசால் பொதுமக்களுக்காக தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு கரும்பு, பச்சரிசி மற்றும் 1000 ரூபாய் அடங்கிய பரிசுத் தொகுப்பை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக இன்று தஞ்சை மாநகரத்தில் கரந்தையில் மிளகுமாரி செட்டி தெருவில் இயங்கி வரும் நியாய விலை கடையில் அந்த பகுதியில் சேர்ந்த 4ஆவது மாமன்ற உறுப்பினர் திருமதி சுமதி இளங்கோவன், பொங்கல் பரிசுத் தொகுப்பினை திங்கட்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், தரும இளங்கோவன், முன்னாள் மாமன்ற உறுப்பினர். கார்த்திகேயன், மதியழகன், தியாகராஜன், அய்யா மணி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மணி, ரவிக்குமார், தரும கருணாநிதி, அமுல்ராஜ், ராஜா, உதயநிதி, சுந்தரமூர்த்தி, சற்குணன், மதியழகன், மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பரிசுத்தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஆறடி நீளமுள்ள முழு கரும்பு, ரொக்கமாக, ரூபாய் ஆயிரமும், வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment